Tamil News & POLLING

 

பாராளுமன்ற தேர்தல் 15 அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு!

2 years ago 06 ஜனவரி 2024 04:52 AM | views : 141
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.கூட்டணி அமைந்தாலும் சரி. அமையாவிட்டாலும் சரி தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தொகுதி நிலவரம், செல்வாக்கு, தி.மு.க.வுடன் நேரடி போட்டி ஏற்பட்டா லும் வெற்றி பெறும் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.இதுவரை 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம். அதில்
1. டாக்டர் ஜெயவர்தன் (தென்சென்னை),
2. எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை),
3. ராயபுரம் மனோ (வடசென்னை),
4. மா.பா.பாண்டியராஜன் (விருது நகர்),
5. செம்மலை (சேலம்), சந்திரசேகர் (கோவை),
6. எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்),
7. கே.வி.ராமலிங்கம் (ஈரோடு),
8. ராஜ்சத்யன் (மதுரை),
9. கண்ணன் (திண்டுக்கல்),
10. கே.பி.எம்.சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி),
11. ராதா கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி),
12. சண்முகநாதன் அல்லது சரவண பெருமாள் (தூத்துக்குடி)

உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டாராம்.

தான் வேட்பாளராக முடிவு செய்திருப்பவர்களை அந்த அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்கும்படி ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.இதையடுத்து தொகுதி களில் வேலைகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI MK STALIN ADMK AIADMK AMMK உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TAMIL NADU TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் INDIAN CRICKET TEAM இந்திய அணி ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் சீமான் கனமழை PMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக CONGRESS PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI அமமுக கைது SEEMAN கோவை COIMBATORE சட்டசபை தேர்தல் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை தீபாவளி NELLAI THIRUMAVALAVAN நெல்லை தமிழ்நாடு THOOTHUKUDI திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை TAMIL ACTRESS கள்ளக்காதல் OPS திருமாவளவன் தென்காசி விடுமுறை AJITH வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் ELECTION COMMISSION TAMIL CINEMA டிரெண்டிங் கொரோனா ASSEMBLY ELECTIONS வன்னியர் MADURAI தமிழக அரசு நயினார் நாகேந்திரன் கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON SENGOTTAIYAN ஓபிஎஸ் தேவர் அஜித் திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP