POLLING FLAMES

 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா: 18-ந்தேதி நடக்கிறது

3 months ago 13 ஜனவரி 2026 07:27 AM | views : 736
கன்னியாகுமரியில் உலகப் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை தினத்தன்று தை அமாவாசை விழா கோலாகலமாகக் கொண்டடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி தை அமாவாசை விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும், உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடைபெறும். அதன் பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

புனித நீராடல்தை அமாவாசையையொட்டி அன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடுவார்கள். பின்னர் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் செய்வார்கள்.

அதன்பிறகு கடலில் புனித நீராடிவிட்டு ஈரத்துணியுடன் வந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்கள்.

தை அமாவாசையையொட்டி பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபடுவார்கள்.

ஆராட்டு நிகழ்ச்சிஅம்மன் வீதி உலா முடிந்தபிறகு இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம்வரச் செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்தன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் MK STALIN ANBUMANI RAMADOSS TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி AIADMK UDHAYANIDHI STALIN காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக அன்புமணி ராமதாஸ் கோவை INDIAN CRICKET TEAM CONGRESS தமிழகம் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE முக ஸ்டாலின் கொலை பிரதமர் மோடி அமமுக KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் கைது AJITH சீமான் வன்னியர் OPS PARLIAMENT ELECTION தமிழ்நாடு நெல்லை SURIYA THIRUMAVALAVAN NELLAI TAMIL ACTRESS கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION தீபாவளி திருப்பரங்குன்றம் மதுரை அன்புமணி CSK தூத்துக்குடி விடுமுறை அஜித் நடிகை பாலியல் தொல்லை தென்காசி கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH கள்ளக்காதல்