POLLING FLAMES

 

அம்பலமான தி.மு.க. அரசின் தொழில் முதலீட்டு பொய் மூட்டைகள்! - அன்புமணி

3 months ago 06 பிப்ரவரி 2026 05:28 AM | views : 840
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ரூ.34,237.39 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு செய்து கொண்ட ரூ.12.16 லட்சம் கோடி மதிப்பிலான 1176 தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 80%க்கும் கூடுதலான முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக ஆட்சியாளர்கள் கூறி வந்த நிலையில், அவை அனைத்தும் பொய் என்பதை நிரூபிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தான் மிகச்சிறந்த சான்றுகள் ஆகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்களில் முதன்மையானது ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கத் திட்டங்கள் ஆகும். ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கம் தொடர்பாக அந்த நிறுவனம் தமிழக அரசுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் 11.05.2023-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹூண்டாய் மகிழுந்து ஆலையை விரிவுபடுத்துவது, மின்சார மகிழுந்துகளை தயாரிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

இரண்டாவது ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது. ரூ.6180 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தமும் ஹூண்டாய் மகிழுந்து நிறுவனத்தின் விரிவாக்கம் தொடர்பானது தான். மொத்தம் 26,180 கோடி மதிப்பிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை; இதில் உறுதியளிக்கப்பட்டிருந்த தொகையில் ரூ.500 கோடி கூட இன்னும் முதலீடு செய்யப்படவில்லை என்பதை பல முறை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி சென்னையில் நான் வெளியிட்ட 'தி.மு.க. அரசின் பொய் முதலீடுகள்' என்ற தலைப்பிலான ஆவணத்திலும் இது குறித்து விரிவாக விளக்கியிருந்தேன். ஆனால், 80%க்கும் கூடுதலான முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக தி.மு.க. அரசு மீண்டும், மீண்டும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு வந்தது. ஆனால், ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீடுகளுக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே, அந்த நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையிலான முதலீடுகள் இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. தொழில் முதலீடுகளைப் பொறுத்தவரை தி.மு.க. தொடக்கம் முதலே பொய்களைத் தான் கூறி வருகிறது என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் எதுவும் தேவையில்லை.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மேலும் இரு தொழில் முதலீடுகளை செய்ய இருப்பவை கெயின்ஸ் சர்க்யூட் இந்தியா நிறுவனம், சென்னையைச் சேர்ந்த இராதா எஞ்சினியரிங் நிறுவனம் ஆகியவை ஆகும். இந்த நிறுவனங்கள் முறையே ரூ.4,995 கோடி, ரூ.1500 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 04.08.2025-ஆம் நாள் தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டன.

அதேபோல், எவர்வான் கோத்தாரி நிறுவனம் ரூ.5000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 26.02.2025-ஆம் நாளும், ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.1300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் 25.11.2025-ஆம் நாளும் கையெழுத்திடப்பட்டன. இவற்றின் முதலீட்டுத் திட்டங்களுக்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த முதலீடுகளும் இன்னும் செயலாக்கம் பெறவில்லை என்பதை தி.மு.க. அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றாலும் கூட, அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீடுகள் மட்டுமே செயலாக்கம் பெற்றுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மதிப்பில் இது வெறும் 8.20% மட்டும் தான். ஆனால், ஒட்டுமொத்த தொழில் முதலீடுகளும் வந்து விட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வந்தது. தி.மு.க. அரசின் முகமூடி இப்போது கிழிந்து விட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் எந்தவொரு உருப்படியான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை. ஐந்தாண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெறும் 8.20 விழுக்காட்டை மட்டுமே தி.மு.க. அரசால் ஈர்க்க முடிந்திருக்கிறது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகள், அதாவது வெறும் 13% மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. அரசின் இந்த படுதோல்விகளை பல்வேறு காலகட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது.

படித்த இளைஞர்களுக்கு 5.50 லட்சம் அரசு வேலை வழங்குதல், தனியார் நிறுவனங்களில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குதல், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றுதல், மாதந்தோறும் மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்து அதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல், பேருந்துக் கட்டணத்தைக் குறைத்தல், மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்தல், நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுதல் என உறுதியளித்திருந்த அனைத்து சத்தியங்களையும் நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு தோல்வியடைந்து விட்டது.

ஆனால், இந்த தோல்விகள் அனைத்தையும் வெற்று விளம்பரங்களின் மூலமாகவும், வெறும் ஜோடனைகள் மூலமாகவும் மூடி மறைக்க தி.மு.க. அரசு முயன்றது. ஆனால், அவை அனைத்தும் இப்போது அம்பலமாகி விட்டன. இவை அனைத்தும் தி.மு.க.வின் தோல்விகள் மட்டுமல்ல... தி.மு.க.வின் துரோகங்கள். இவற்றை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள். தி.மு.க.வின் துரோகங்களுக்காக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் படுதோல்வியை பரிசாகத் தரப்போவது உறுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி AIADMK PMK காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN CONGRESS கனமழை பாமக INDIAN CRICKET TEAM தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் கோவை திருமாவளவன் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் அமமுக NELLAI தமிழ்நாடு கைது OPS நெல்லை தேவர் பிரதமர் மோடி சீமான் SURIYA வன்னியர் KEERTHY SURESH தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் கொரோனா AJITH ஓபிஎஸ் தூத்துக்குடி THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சூர்யா ELECTION COMMISSION பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் PARLIAMENT ELECTION CSK RAJINIKANTH அன்புமணி அஜித் மதுரை கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை நடிகை விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி THOOTHUKUDI கள்ளக்காதல்