POLLING FLAMES

 

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

19 hours ago 30 ஏப்ரல் 2026 03:24 PM | views : 48

கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களை திசை திருப்பும் வேலையை திமுக செய்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 30) விமர்சித்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,''எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது.கருத்துக் கணிப்புகள் என்ற பேரில் பொய் தகவல்களைப் பரப்பி, தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் திசை திருப்பும் வேலையை, திமுக திட்டமிட்டு செய்து வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கண்டு யாரும் கலங்கத் தேவையில்லை.


நமக்கு எதிரான கருத்துக் கணிப்புகளைக் கண்டு யாரும் மனம் தளர வேண்டாம். கருத்துக் கணிப்புகள் அப்படியே நடந்ததாக வரலாறு கிடையாது. எல்லா கருத்துக் கணிப்புகளையும் உடைத்தே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை ஆட்சி அமைத்திருக்கிறது.சில கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சி தொடரும் என்றது; சில கருத்துக் கணிப்புகள் மட்டுமே அஇஅதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தன.


2016-லும் இதேபோன்று கருத்துக் கணிப்பு சொல்லப்பட்டது. அதைப் பொய்யாக்கி மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைத்தது. இது தான் வரலாறு. ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக் கணிப்புகளை உடைத்தெறிந்து, வீறுகொண்டு எழுவதுதான் அதிமுகவின் தனித் தன்மை. இந்தத் தேர்தலிலும் அத்தகைய வெற்றி கண்டிப்பாக தொடரும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 210 தொகுதிகளில் உறுதியாக வெல்லும். கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.அதேநேரம் 'தோற்கப்போகிறோம்' என்பது ஸ்டாலினுக்குத் தெரிந்துவிட்டது. எனவே, இப்படியான கருத்துக் கணிப்புகளை திட்டமிட்டு வெளியிடுவதற்கு பின்னணியில் சூழ்ச்சி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, திமுக வெல்லப்போகிறது என்ற மாய பிம்பத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்வதற்கும், கலவரம் செய்து தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்குவதற்கும் திமுக-வினர் முயற்சி செய்வார்கள்.


எனவே, 4.5.2026-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் நம் கழகத் தொண்டர்கள், பூத் ஏஜெண்ட்டுகள், வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரும் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும்.மக்களின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் மட்டுமே அல்லும் பகலும் அயராது பாடுபட்டுவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிச்சயம் மலரும்'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் AIADMK PMK ANBUMANI RAMADOSS கனமழை பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் பாமக தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN தமிழகம் CONGRESS இந்திய அணி முக ஸ்டாலின் கோவை கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு திருமாவளவன் OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி COIMBATORE கைது சீமான் AJITH KEERTHY SURESH INDIAN CRICKET TEAM ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் மதுரை TAMIL ACTRESS தீபாவளி BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் தேவர் NELLAI நெல்லை வன்னியர் வடகிழக்கு பருவமழை கொரோனா THIRUMAVALAVAN RAJINIKANTH SURIYA அஜித் மோடி தூத்துக்குடி அன்புமணி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் CSK கீர்த்தி சுரேஷ் தென்காசி சூர்யா கள்ளக்காதல் விடுமுறை