POLLING FLAMES

 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காது - செல்வப்பெருந்தகை

4 hours ago 27 ஏப்ரல் 2026 07:25 AM | views : 14

திண்டுக்கல் ,

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். கொடைக்கானலில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.


முதல்-அமைச்சரின் 5 ஆண்டுகள் அயராத உழைப்புக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவரது திட்டங்களுக்கு பரிசாக அதிக வாக்குப்பதிவு கிடைத்துள்ளது. 200க்கும் அதிகமான தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றிபெறும். 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

உழவுத்துறை அறிக்கையின்படி என் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெளிப்படைதன்மை இல்லாதது ஏன்? என்று வீடியோ ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பியுள்ளேன். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலும் இது போன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதே போல் பா.ஜனதா, அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மத்திய அரசு யாருக்கு சாதகமாக செயல்படுகிறது என்பது தெரிய வரும்.


எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல இதுவரை யாரும் உருவாகவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தினர் தாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போவதைப் போல துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பட்டியலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். எங்கள் கூட்டணியில்தான் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வங்கி உள்ளது.



எனவே எங்கள் கூட்டணியின் பலத்துக்கு முன்பு போட்டியே கிடையாது. ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்பார்கள்.



எஸ்.ஐ.ஆர். சீரமைப்பு காரணமாக வாக்கு சதவீதம் உயர்ந்தது போல கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கமான வாக்குப்பதிவுதான் நடந்துள்ளது. யாருக்காகவும் வாக்கு சதவீதம் உயரவில்லை.

அ.தி.மு.க.வுக்கு வருகிற தேர்தலில் 28 இடங்கள் கூட கிடைக்காது. அவர் எதிர்கட்சி தலைவர் பதவியில் கூட அமர முடியாது.


இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி PMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS கனமழை UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் AIADMK ரஜினிகாந்த் பாமக இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் தமிழகம் கோவை PARLIAMENT ELECTION கைது அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தேவர் அமமுக KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI சீமான் வன்னியர் OPS கொலை AJITH THIRUMAVALAVAN TAMIL ACTRESS மதுரை பிரதமர் மோடி ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை NELLAI சட்டசபை தேர்தல் கொரோனா RAJINIKANTH நெல்லை BIGG BOSS TAMIL கள்ளக்காதல் சூர்யா தூத்துக்குடி அன்புமணி 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION SURIYA TAMILAGA VETTRI KAZHAGAM அஜித் திருப்பரங்குன்றம் தமிழ்நாடு CSK பாலியல் தொல்லை விடுமுறை கீர்த்தி சுரேஷ் தென்காசி தமிழக சட்டசபை தேர்தல்