POLLING FLAMES

 

வாக்கு எண்ணிக்கை நிறைவு... எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? முழு விவரம்!

9 hours ago 05 மே 2026 01:08 AM | views : 17

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுமை பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெற்றியாளர்களின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிில் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. எதிர்க்கட்சியாகியுள்ளது. இதுதவிர தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

கொளத்தூரில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

த.வெ.க. 108

தி.மு.க. கூட்டணி - 73 தொகுதிகள்

அ.தி.மு.க. கூட்டணி - 53 தொகுதிகள்

நா.த.க. - 0

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும், தே.மு.தி.க. 1 தொகுதியிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க. மட்டும் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மறுப்பக்கம் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. கட்சி 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. 1 தொகுதியிலும், அ.ம.மு.க. கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க. 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதத்தை பொருத்தவரை 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 34.92 சதவீதம் வாக்குகளையும், தி.மு.க. 24.19 சதவீதமும், அ.தி.மு.க. 21.21 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ள.

வாக்குகளை பொருத்தவரை த.வெ.க. அதிகபட்சமாக 1,72,26,209 வாக்குகளையும், தி.மு.க. 5,89,500 வாக்குகளையும், அ.தி.மு.க. 1,04,62,146 வாக்குகளையும் பெற்றன.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN AIADMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் கனமழை PMK இந்திய அணி பாமக முக ஸ்டாலின் CONGRESS கோவை அன்புமணி ராமதாஸ் UDHAYANIDHI STALIN தமிழகம் INDIAN CRICKET TEAM கைது COIMBATORE திருமாவளவன் EDAPPADI PALANISWAMI கொலை வன்னியர் தேவர் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கொரோனா சீமான் அமமுக OPS PARLIAMENT ELECTION AJITH KEERTHY SURESH தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN TAMIL ACTRESS நெல்லை சூர்யா தீபாவளி ஓபிஎஸ் SURIYA NELLAI தென்காசி ELECTION COMMISSION RAJINIKANTH விடுமுறை பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை CSK அன்புமணி அஜித் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி மதுரை கள்ளக்காதல்