POLLING FLAMES

 

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 8-ந்தேதி வெளியாகுமா? வெளியான முக்கிய தகவல்

8 hours ago 06 மே 2026 02:13 AM | views : 27

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.


இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 8-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மாணவ- மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.



இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை சார்ந்த சில அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலை பெறவேண்டும். இதனால் திட்டமிட்டபடி வருகிற 8-ந்தேதி பிளஸ்-2 முடிவுகளை வெளியிட முடியாது. புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் MK STALIN ANBUMANI RAMADOSS TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி AIADMK UDHAYANIDHI STALIN காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக அன்புமணி ராமதாஸ் கோவை INDIAN CRICKET TEAM CONGRESS தமிழகம் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE முக ஸ்டாலின் கொலை பிரதமர் மோடி அமமுக KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் கைது AJITH சீமான் வன்னியர் OPS PARLIAMENT ELECTION தமிழ்நாடு நெல்லை SURIYA THIRUMAVALAVAN NELLAI TAMIL ACTRESS கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION தீபாவளி திருப்பரங்குன்றம் மதுரை அன்புமணி CSK தூத்துக்குடி விடுமுறை அஜித் நடிகை பாலியல் தொல்லை தென்காசி கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH கள்ளக்காதல்