POLLING FLAMES

 

இன்னும் 2 மாதத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார்!

2 years ago 05 ஜனவரி 2024 05:20 AM | views : 264
சென்னை:தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை கட்சியின் மூத்த அமைச்சர்கள் அணுகி வருகின்றனர்.அரசு நிகழ்ச்சிகளுக்கு மூத்த அமைச்சர்கள் வந்திருந்தாலும் அதில் உதயநிதி ஸ்டாலின்தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். கட்சி நிர்வாகிகள் அவரை 'சின்னவர்' என்று பவ்யமாக அழைக்கின்றனர். அமைச்சராக பொறுப்பெற்ற பிறகு மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை 2 முறை சந்தித்து பேசி விட்டு வந்துள்ளார்.

இன்னும் 2 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.இதற்கு முன்னதாக தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு சேலத்தில் இம்மாதம் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகி அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை நடத்த தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.இளைஞரணி மாநாடு முடிந்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் வழங்கப்பட்டு விடும் என்று கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விசயம் கிசுகிசுக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் அமைச்சரவையில் இலாகா மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை திருமாவளவன் தமிழகம் கொலை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் COIMBATORE தேவர் தமிழ்நாடு பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM கைது வன்னியர் அமமுக KEERTHY SURESH சீமான் OPS தமிழக சட்டசபை தேர்தல் NELLAI SURIYA நெல்லை TAMIL ACTRESS AJITH சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் சூர்யா BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN கள்ளக்காதல் CSK அஜித் விடுமுறை தென்காசி தூத்துக்குடி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை வடகிழக்கு பருவமழை RAJINIKANTH மதுரை தீபாவளி கீர்த்தி சுரேஷ் அன்புமணி