POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

தி.மு.கவை வீட்டிற்கு அனுப்ப கூடிய ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி தான்; டி.டி.வி.தினகரன் பேச்சு

2 days ago 13 ஏப்ரல் 2026 04:58 PM | views : 23

தஞ்சையை அடுத்த திருவையாறு தேரடியில் திருவையாறு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வேலு.கார்த்திகேயனை ஆதரித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ​நமது திருவையாறு பகுதி மக்கள் எத்தனை முறை தான் தி.மு.க.விற்கே ஓட்டுப்போட்டு சலிச்சுப்போயிருப்பீங்க? என்னங்க வந்திருக்கு தி.மு.க.ஆட்சியில். மு.க.​ஸ்டாலினும், அவரது பையன் குட்டி ஸ்டாலினும் வந்து அதை செய்தோம். இதை செய்தோம். அதுவும் செங்கலை தூக்கிட்டு வந்தாரே எய்ம்ஸ் கட்டவில்லை என்று. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது 11 மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு வந்தது.



​இப்போது இவங்க அப்பா ஆட்சியில் எத்தனை மருத்துவக்கல்லூரி வந்துச்சுன்னு நீங்கள் கேட்கணும். அவங்க குடும்பம் வேண்டும் என்றால் மருத்துவக்கல்லூரியை வேற மாநிலத்துல திறந்திருக்கலாமே தவிர, அவர்களுக்கு வேண்டியவர்கள் திறந்திருக்கலாம். நீட்டை எங்க அப்பா ரத்து செஞ்சுருவார் என்று குட்டி ஸ்டாலின் சொன்னாரு. இன்னும் பேனாவே கிடைக்கவில்லையோ. மக்களை ஏமாத்துவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்றது. ​


பழைய தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை. ஆனால் இப்போது புதிய தேர்தல் வாக்குறுதியை தைரியமாக கொடுக்குறாங்க பாருங்க. காரணம் உங்களை எல்லாம் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ரூ.1000, ரூ.2 ஆயிரம் என பணத்தை மக்களிடம் கொடுத்துவிட்டால், கையில் பணத்தை வாங்கிட்டோமே என சொல்லி ஓட்டுப் போடுறாங்க. அந்த பணம் எல்லாம் எங்கிருந்து வந்துச்சு? அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நமது டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டது.


இல்லையென்றால் இங்கெல்லாம் தொழிற்சாலைகள் வந்திருக்கும். தி.மு.க. என்கிற தீய சக்தியை வீட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி தான். எனவே, வரும் தேர்தலில் நமது வெற்றி சின்னமான குக்கர் சின்னத்தில் வாக்களித்து தம்பி வேலு.கார்த்திகேயனை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK தவெக ANNAMALAI AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK கனமழை TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK பாமக காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் CONGRESS தமிழகம் இந்திய அணி ரஜினிகாந்த் கைது கோவை UDHAYANIDHI STALIN திருமாவளவன் INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI COIMBATORE பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை வன்னியர் PARLIAMENT ELECTION அமமுக KEERTHY SURESH கொலை தேவர் சீமான் OPS நெல்லை NELLAI தென்காசி TAMIL ACTRESS AJITH தீபாவளி SURIYA ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM அஜித் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN அன்புமணி BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை விடுமுறை NORTHEAST MONSOON CSK சூர்யா மதுரை கொரோனா கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI ELECTION COMMISSION