POLLING FLAMES

 

தி.மு.க. முப்பெரும் விழாவால் எந்த பலனும் இல்லை - அண்ணாமலை

1 year ago 14 ஜூன் 2024 03:22 AM | views : 255
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கோவையில் வரும் 15-ந்தேதி (அதாவது நாளை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன்.

கல்வியிலும், தொழில் துறையிலும் கோலோச்சிய கோவை, தி.மு.க. ஆட்சியில் செயலிழந்து இருக்கிறது.கடந்த 30 வருடங்களாக, மறைந்த கருணாநிதி காலத்தில் இருந்து, தி.மு.க.வின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற வரி மட்டும் தவறாமல் இடம்பெறும்.

ஆனால், திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கவுசிகா நதியும் பாழ்பட்டு கிடக்கின்றன. ஆனால் தி.மு.க.வுக்கு அவை குறித்து கவலை இல்லை. தி.மு.க. அரசின் மின்கட்டண உயர்வால், விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கி இருக்கிறது.கோவை மாநகருக்கு உடனடி தேவை, சாலை வசதிகளும், தண்ணீர்ப் பஞ்சத்துக்கான தீர்வுகளும்தான். அதுபோக, மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை.

இதில் முப்பெரும் விழா என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து, கோவையை மேலும் குப்பைக் கிடங்காக ஆக்குவதுதான் இந்த விழாவின் விளைவாக இருக்கப் போகிறது.

உண்மையிலேயே தி.மு.க.வுக்கு, கோவை மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கோவை மக்களின் அறுபது ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். கோவை பகுதி நீர்நிலைகளை சீரமைத்து, தண்ணீர் பஞ்சத்தை தடுத்திருக்க வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள கம்யூனிஸ்டு அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுத்திருக்க வேண்டும்.

கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு, தமிழக பா.ஜனதா சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், பத்தில் ஒரு பங்கை தி.மு.க. அரசு நிறைவேற்ற முன்வந்தாலே, கோவையின் பல ஆண்டு கால ஏக்கம் தீரும். ஆனால், அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION CONGRESS INDIAN CRICKET TEAM கோவை முக ஸ்டாலின் COIMBATORE கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI தமிழகம் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி KEERTHY SURESH அமமுக வன்னியர் சீமான் தேவர் OPS தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை NELLAI கொரோனா சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS கைது SURIYA THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL AJITH தீபாவளி சூர்யா ஓபிஎஸ் மதுரை விடுமுறை கள்ளக்காதல் அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தென்காசி ELECTION COMMISSION RAJINIKANTH திருப்பரங்குன்றம் CSK அன்புமணி கீர்த்தி சுரேஷ்