POLLING FLAMES

 

விசில் சத்தம் 200-ஐ தாண்டும் என்பது ஓவர்: தமிழிசை விமர்சனம்

1 hour ago 28 ஏப்ரல் 2026 02:47 PM | views : 21

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 200-ஐ இடங்களைத் தாண்டுவது என்பதெல்லாம் கனவுதான் என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "விஜய் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால், குழந்தைகளைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என விதியில் இருக்கும்போது அவர்களை பெற்றோர்களிடம் அடம்பிடிக்கச் சொல்வது என்பது குழந்தைகளின் மனங்களில் தவறான கருத்துகளை விதைப்பது போன்றது.இந்த வயதில் பிரசாரங்களுக்காக பழக்கினால், அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் என்பதை விஜய் உணர வேண்டும். இவையெல்லாம் சுயநல அரசியலை நோக்கிச் செல்கிறதோ என அச்சமாக உள்ளது.


200 இடங்களுக்கும் அதிகமாக விசில் போகும் என்பதெல்லாம் ஓவரான சத்தம். செங்கோட்டையன் சொல்வதைப் பார்த்தால் விசில் சத்தம்போல் இல்லை, வெடிகுண்டு சத்தம் போன்றிருக்கிறது.விசிலுக்கென ஒரு சத்தமிருக்கிறது, அதனைத் தாண்டி சத்தமெல்லாம் போட முடியாது. விசில் சத்தம், 200-ஐ தாண்டும் என்பது மிக பிரமாண்டமான கனவு.கனவு காணுவதற்கு அத்தனை பேருக்கும் உரிமை இருக்கிறது. ஆகையால், நன்றாக கனவு காணட்டும். மிஞ்சிப் போனால், மே 4 வரையில் கனவு காணுவார்கள்" என்று தெரிவித்தார்.




மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ANNAMALAI AMMK தவெக ADMK உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி PMK AIADMK UDHAYANIDHI STALIN பாராளுமன்ற தேர்தல் கனமழை பாமக மு.க.ஸ்டாலின் தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் இந்திய அணி கோவை அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் முக ஸ்டாலின் CONGRESS COIMBATORE சீமான் INDIAN CRICKET TEAM திருமாவளவன் கொலை கைது PARLIAMENT ELECTION NELLAI வன்னியர் சட்டசபை தேர்தல் அமமுக பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI OPS KEERTHY SURESH நெல்லை BIGG BOSS TAMIL மதுரை TAMIL ACTRESS தேவர் AJITH THIRUMAVALAVAN வடகிழக்கு பருவமழை ஓபிஎஸ் தமிழ்நாடு தென்காசி திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை சூர்யா ELECTION COMMISSION தீபாவளி RAJINIKANTH 2024 T20 WORLDCUP தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை கள்ளக்காதல் தூத்துக்குடி அன்புமணி அஜித் TAMILAGA VETTRI KAZHAGAM SURIYA கீர்த்தி சுரேஷ் CSK