மத்திய பாஜக அரசின் அமைச்சரவையில் தகவல்தொடர்புத் துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிராதித்ய சிந்தியா.
இவர் மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க வினோத யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் அவர் கூறியதாவது, ``நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப் பயன்படுத்துவதில்லை. மே மற்றும் ஜூன் மாதங்களில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டி வதைக்கும் போதும் மக்கள் என்னிடம் நான் ஏசி பயன்படுத்தாது குறித்துக் கேட்கிறார்கள். அவர்களிடம் 'இது சம்பல் மண்ணின் தோல். எனக்கு வெப்பம் ஒரு பொருட்டல்ல' என்று பெருமையாக சொல்லுவேன்.
நான் பார்ப்பதற்கு இளைஞனாகத் தெரிந்தாலும், எனது ஆன்மா மிகவும் பழைமையானது. பழைய விஷயங்களை நாம் மறந்துவிடக் கூடாது. எப்போதும் உங்கள் சட்டைப் பையில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
இந்த நவீன காலத்தில் அனைவரும் நவீனப் பெட்டிகளை (செல்போன்) சுமந்து செல்கிறார்கள். ஆனால், இந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரோ வெங்காயத்தைச் சுமக்கிறேன்.
ஆயுர்வேதம் வளர்ச்சி கண்டு வரும் சூழலில், இது போன்ற பாரம்பர்ய நடைமுறைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது" என்று தெரிவித்தார்.
அவரின் இந்த பேச்சு இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. இருப்பினும் அவருக்கு ஆதரவுக்க குரலும் எழுந்து வருகிறது. சில நன்மைகள் இருப்பினும் பாக்கெட்டில் வெங்காயம் வைத்திருப்பது வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட தீர்வு இல்லை.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
மேற்குத் தொடர்ச்சி மலையில் கடும் வறட்சி: முதுமலையில் 3 யானைகள்...அடுத்த செய்தி (Next) »
மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: