POLLING FLAMES

 

சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியை நிராகரிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

1 year ago 05 ஜூன் 2024 07:13 AM | views : 236
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்று நடத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் பேசவுள்ள எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்.இந்தியாவை கூறுபோட நினைத்த பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். கூட்டணி ஆட்சியமைக்க மோடி நினைக்கிறார். ஆனால் அது ஒரு போதும் நடக்காது. இந்தியா கூட்டணி கட்சியினர் மக்களின் குரலாக இருப்பார்கள்.ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

பிரதமர் மோடியை ராமரும் கைவிட்டார், விவேகானந்தரும் கைவிட்டார். ராமர் நிராகரித்த பாஜகவை சந்திரபாபு நாயுடு ஏன் நிராகரிக்கவில்லை?. மக்கள் நலனுக்காக மோடியை சந்திரபாபு நாயுடு நிராகரிக்க வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி எழுதி கொடுப்பதை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்றார்; அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையும் என பிரதமர் மோடி மாற்றி கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK பாமக INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் தமிழகம் கோவை CONGRESS EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE திருமாவளவன் தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் கைது பிரதமர் மோடி AJITH தமிழ்நாடு KEERTHY SURESH வன்னியர் OPS அமமுக கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் SURIYA THIRUMAVALAVAN நெல்லை NELLAI ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் மதுரை அன்புமணி கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION தென்காசி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை அஜித் தூத்துக்குடி திருப்பரங்குன்றம் CSK RAJINIKANTH தீபாவளி விடுமுறை