Tamil News & POLLING

 

பெரிய அடி வாங்கிய அதிமுக.. 7 தொகுதிகளில் டெபாசிட் காலி! 3 தொகுதிகளில் 3வது இடம்..!

1 year ago 05 ஜூன் 2024 02:11 AM | views : 166
சென்னை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த முறை 32 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடம் கூட கிடைக்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் தான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்த கடைசி நாடாளுமன்ற தேர்தல் ஆகும். அந்த தேர்தலில் 'இந்த லேடியா? அல்லது மோடியா?' என்ற அவரது பிரசார முழக்கம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. அதோடு 44 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தது.அதன்பின் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. சந்தித்த 2019 மற்றும் தற்போதைய 2024-ம் ஆகிய 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பா.ஜனதா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்தது. அதில் அ.தி.மு.க. 20 இடங்களில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 19.39 சதவீத வாக்குகள் தான் கிடைத்தது.

இதுதான் அ.தி.மு.க. வரலாற்றில் அந்த கட்சிக்கு கிடைத்த குறைந்தபட்ச வாக்கு சதவீதம் ஆகும்.

அதே போல் இந்த தேர்தலில் அ.தி.முக., தே.மு.தி.க. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. மொத்தம் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK AIADMK டிடிவி தினகரன் ADMK காங்கிரஸ் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS கனமழை CONGRESS ரஜினிகாந்த் PMK சீமான் UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION தீபாவளி EDAPPADI PALANISWAMI கோவை கைது அமமுக KEERTHY SURESH SEEMAN கொலை COIMBATORE வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் THOOTHUKUDI TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் விடுமுறை TAMIL ACTRESS AJITH தென்காசி தமிழ்நாடு திருநெல்வேலி THIRUMAVALAVAN ஓபிஎஸ் NELLAI கள்ளக்காதல் நெல்லை மதுரை வன்னியர் டாப் நியூஸ் டிரெண்டிங் 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON MADURAI நயினார் நாகேந்திரன் தேவர் பாலியல் தொல்லை கொரோனா TAMIL CINEMA OPS அஜித் ELECTION COMMISSION தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN