POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை!

5 days ago 14 ஏப்ரல் 2026 07:01 AM | views : 50

திருப்பரங்குன்றத்தில் கார்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படும், தைப்பூசம் மாநில விழாவாக கொண்டாடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.இந்த நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று காலை வெளியிட்டார். இந்த நிகழ்வில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இந்த தேர்தல் அறிக்கைக்கு ’புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.முக்கிய வாக்குறுதிகள்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் குடும்பத்துக்கு தலா ரூ. 10,000 வழங்கப்படும்.மகளிருக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்.பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி பண்டிகைக்கு தலா ஒரு சிலிண்டர் வீதம் மொத்தம் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.பெண்கள் இரு சக்கர மின் வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம் வழங்கப்படும்.தைப்பூசம் மாநில விழாவாக கொண்டாடப்படும்.திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ADMK ANNAMALAI AMMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் PMK காங்கிரஸ் AIADMK பாமக தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் கனமழை அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் UDHAYANIDHI STALIN CONGRESS கோவை ரஜினிகாந்த் சட்டசபை தேர்தல் தமிழகம் கைது COIMBATORE இந்திய அணி தேவர் EDAPPADI PALANISWAMI கொலை பிரதமர் மோடி THIRUMAVALAVAN அமமுக PARLIAMENT ELECTION சீமான் OPS KEERTHY SURESH வன்னியர் ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை நெல்லை TAMIL ACTRESS மதுரை INDIAN CRICKET TEAM AJITH தமிழ்நாடு NELLAI கொரோனா SURIYA BIGG BOSS TAMIL ELECTION COMMISSION தமிழக சட்டசபை தேர்தல் அஜித் மோடி CSK கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை விடுமுறை ASSEMBLY ELECTIONS தென்காசி சூர்யா தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI TAMILAGA VETTRI KAZHAGAM அன்புமணி