Tamil News & POLLING

 

தினகரனுடன் டீல் பேசும் அண்ணாமலை டீம்!

2 years ago 31 மார்ச் 2023 08:00 AM | views : 174
அதிமுக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை லேசாக தட்டிவைத்ததால் இனிமேல் ஈபிஎஸ்ஸுடன் நேரடியாக மோத வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம் அண்ணாமலை. அதேநேரம், இனி ஓபிஎஸ்ஸை நம்பியும் பலனில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் அண்ணாமலையின் போலீஸ் மூளை, டிடிவி தினகரனை முன்னிறுத்தி ஈபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுக்க முடிவெடுத்திருக்கிறதாம்.

இது தொடர்பாக, தஞ்சையில் தங்கிருந்த டிடிவி தினகரனை அண்ணாமலையின் ஆலோசகர்கள் அண்மையில் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ்ஸுக்கு பக்க பலமாய் நிற்கும் ஆடிட்டரின் யோசனைப்படியே இந்த சந்திப்புகள் நடந்ததாம்.

“ஈபிஎஸ் கூடாரத்தைக் கலைக்க ஓபிஎஸ்ஸால் முடியவில்லை. நீங்கள் முழுவீச்சில் இறங்குங்கள்; நாங்கள் துணையாக இருக்கிறோம்” என ஆலோசகர்கள் பேசியதைக் கேட்டு தெம்பாகி இருக்கும் தினகரன், அதே தெம்புடன் ஏப்ரல் 11-ம் தேதி தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்கிறார். இந்தப் பயணத்தின் போது தெற்கில் தினகரன் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறதாம். இந்தக் கூட்டத்தில், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினரை ஆயிரக் கணக்கில் அமமுகவில் இணைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்களாம்!

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK டிடிவி தினகரன் TTV DHINAKARAN ADMK TAMIL NADU AIADMK பாராளுமன்ற தேர்தல் MK STALIN உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் இந்திய அணி ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM PMK சீமான் CONGRESS கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் ரஜினிகாந்த் பாமக அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கொலை பிரதமர் மோடி கைது SEEMAN அமமுக கோவை EDAPPADI PALANISWAMI COIMBATORE சட்டசபை தேர்தல் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை தீபாவளி NELLAI விடுமுறை மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் THIRUMAVALAVAN திருநெல்வேலி TAMIL ACTRESS AJITH நெல்லை ஓபிஎஸ் தமிழ்நாடு கள்ளக்காதல் தென்காசி 2024 T20 WORLDCUP கீர்த்தி சுரேஷ் OPS THOOTHUKUDI ELECTION COMMISSION தேவர் ASSEMBLY ELECTIONS டாப் நியூஸ் NORTHEAST MONSOON டிரெண்டிங் தமிழக அரசு பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் வன்னியர் MADURAI நயினார் நாகேந்திரன் அஜித் வானிலை ஆய்வு மையம்