POLLING FLAMES

 

9 மாவட்டங்களில் செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்!

4 years ago 18 ஆகஸ்ட் 2021 06:55 AM | views : 252
தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாமல் உள்ளன.

இந்த மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.



இதைத் தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாரானது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

மாவட்டம் வாரியாக தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமி‌ஷனர் பழனிகுமார் செய்து வருகிறார். 9 மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி போன்றவை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான தேர்தல் தேதி செப்டம்பர் 15-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. 100 சதவீதம் வெற்றிபெற வேண்டும் என்று இரு கட்சிகளும் வரிந்துகட்டி வருகின்றன.

அதனுடைய கூட்டணி கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK PMK UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM காங்கிரஸ் பாமக ரஜினிகாந்த் கோவை CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கொலை தமிழகம் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் வன்னியர் KEERTHY SURESH பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு OPS அமமுக தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM கைது கொரோனா TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL SURIYA சூர்யா ஓபிஎஸ் நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN AJITH அஜித் ELECTION COMMISSION கள்ளக்காதல் தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை CSK மதுரை அன்புமணி தென்காசி வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி பாலியல் தொல்லை RAJINIKANTH