POLLING FLAMES

 

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்!

4 years ago 18 ஆகஸ்ட் 2021 06:43 AM | views : 276
பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான பாரதி பாஸ்கர் தனது நகைச்சுவை பேச்சால் உலக அளவில் தமிழர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.


கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ள இவர் வங்கியில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பாரதி பாஸ்கர் கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த மருத்துவ முயற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தெரிகிறது. பாரதி பாஸ்கர் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், ஜெபங்கள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இன்னும் ஒரு வாரம் வரை அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் இந்திய அணி TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் PMK INDIAN CRICKET TEAM கனமழை பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை CONGRESS தமிழகம் கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI COIMBATORE திருமாவளவன் தமிழ்நாடு சீமான் அமமுக OPS KEERTHY SURESH தேவர் வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM கைது பிரதமர் மோடி AJITH ஓபிஎஸ் SURIYA சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை TAMIL ACTRESS சூர்யா NELLAI THIRUMAVALAVAN அன்புமணி ELECTION COMMISSION மதுரை வடகிழக்கு பருவமழை அஜித் கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH தென்காசி பாலியல் தொல்லை தீபாவளி CSK கள்ளக்காதல் விடுமுறை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி