POLLING FLAMES

 

‘வாய் தவறி பேசிட்டேன்’... ஜாமின் கொடுங்க நீதிமன்றத்தில் கதறும் மீரா மிதுன்...!

4 years ago 18 ஆகஸ்ட் 2021 12:58 PM | views : 260
நடிகை மீராமிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.



விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் ம்ற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஜாமீன் வழங்க கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீராமிதுன் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.



ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டேன் எனவும் மனுவில் உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த மனு சென்னை முதன்னை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK PMK UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM காங்கிரஸ் பாமக ரஜினிகாந்த் கோவை CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கொலை தமிழகம் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் வன்னியர் KEERTHY SURESH பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு OPS அமமுக தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM கைது கொரோனா TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL SURIYA சூர்யா ஓபிஎஸ் நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN AJITH அஜித் ELECTION COMMISSION கள்ளக்காதல் தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை CSK மதுரை அன்புமணி தென்காசி வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி பாலியல் தொல்லை RAJINIKANTH