POLLING FLAMES

 

கயத்தாரில் கார் பாலத்தில் மோதி விபத்து : டிரைவர் சாவு - 2 பேர் படுகாயம்

4 hours ago 27 ஏப்ரல் 2026 07:48 AM | views : 19

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியைச் சேர்ந்த குமரேசன் மகன் கணேசன் (32) மற்றும் பாளையங்கோட்டை செஞ்சி காலணி பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் ஐஸ்வர்யா (27) ஆகியோர் மதுரைக்கு சென்று திரும்பி காரில் திருநெல்வேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரிசெல்வம் (29) ஓட்டி வந்தார்.


மதுரை–திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தார் அருகே வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மாரிசெல்வம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


மேலும் படுகாயமடைந்த கணேசன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி PMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS கனமழை UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் AIADMK ரஜினிகாந்த் பாமக இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் தமிழகம் கோவை PARLIAMENT ELECTION கைது அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தேவர் அமமுக KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI சீமான் வன்னியர் OPS கொலை AJITH THIRUMAVALAVAN TAMIL ACTRESS மதுரை பிரதமர் மோடி ஓபிஎஸ் NELLAI வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் கொரோனா RAJINIKANTH நெல்லை BIGG BOSS TAMIL கள்ளக்காதல் சூர்யா தூத்துக்குடி அன்புமணி 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION SURIYA TAMILAGA VETTRI KAZHAGAM கீர்த்தி சுரேஷ் விடுமுறை CSK திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் தென்காசி அஜித் பாலியல் தொல்லை தமிழ்நாடு