Tamil News & POLLING

 

கொடுங்கோல் ஆட்சி செய்யும் திமுகவுக்கு செங்கோல் குறித்து என்ன தெரியும்.. விளாசும் தமிழிசை..!!

1 year ago 27 ஜூன் 2024 11:51 AM | views : 160
நாடாளுமன்றத்தில் செங்கோலை அகற்றும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, செங்கோல் என்பது கொடுங்கோலின் சின்னம் கிடையாது, செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம் எந்த தமிழ் அரசரும் மக்கள் ஆட்சி மீறி ஆட்சி நடத்தவில்லை.

இது தமிழ் மண்ணின் நீதி தவறாமல் ஆட்சி நடப்பது என்பதற்கு ஆன குறியீடு தான் செங்கோல். ஆக பாராளுமன்றமும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரத பிரதமர் அதை நிறுவினார்.

கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த செங்கோலின் தன்மையும் புனிதத்துவமும் தெரியாது என்பதை அவர்கள் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது.

அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. சமாஜ்வாதி காட்சியை சார்ந்தவர்கள் எதிர்க்கலாம். ஆனால் நம் தமிழகத்தைச் சார்தவர்கள் எதிர்க்கலாமா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான பொய் முகம் இன்று கிழித்தெரியப்பட்டிருக்கிறது. தமிழும் தமிழ் கலாச்சாரமும் அவர்களின் அரசியலுக்காக தான் அவர்களின் உணர்வுகளுக்காக அல்ல!. என கூறியுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK காங்கிரஸ் TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் AIADMK ADMK உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS சீமான் CONGRESS கனமழை PMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக பிரதமர் மோடி கைது அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI கோவை COIMBATORE KEERTHY SURESH அமமுக வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் தீபாவளி SEEMAN கொலை TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI நெல்லை விடுமுறை திருநெல்வேலி THOOTHUKUDI தென்காசி AJITH திருமாவளவன் TAMIL ACTRESS தமிழ்நாடு ஓபிஎஸ் கள்ளக்காதல் THIRUMAVALAVAN மதுரை கொரோனா தேவர் அஜித் NORTHEAST MONSOON வன்னியர் OPS பாலியல் தொல்லை SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் நயினார் நாகேந்திரன் 2024 T20 WORLDCUP டிரெண்டிங் ELECTION COMMISSION MADURAI தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் ASSEMBLY ELECTIONS