POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

‘பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு ஸ்டாலினும், அவரது மருமகனும்தான் காரணம்’ - அன்புமணி ராமதாஸ்

1 hour ago 21 ஏப்ரல் 2026 12:17 PM | views : 32

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தின் இன்று தனது இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் கூட்டணிக் கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸும் கலந்துகொண்டு பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ்,

“அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியான என்டிஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் இபிஎஸ் இன்னும் 2 மாதத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். அவர் ஒரு விவசாயி, சேலம் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் என்பது எல்லோருக்கும் பெருமை. தமிழ்நாட்டிற்கு விடுதலை கிடைக்க வேண்டும். இந்த நரக ஆட்சிக்கு உங்கள் மூலம், தாய்மார்கள், பெண்கள் மூலம் விடிவுகாலம் வர வேண்டும்.

62 ஆயிரம் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…அதில் 27 ஆயிரம் வழக்குகள் போக்சோ வழக்குகள். 44 ஆயிரம் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள். இப்படி ஒரு ஆட்சியா..? ஆனால், முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஏதோ வருகிறார் விளம்பரப் படத்தில் நடக்கிறார். வீட்டிற்குப் போகிறார். ஏதோ எழுதிக் கொடுக்கிறார்கள், அதை படிக்கிறார்.

ஸ்டாலின் ஆட்சியில் ஒரு பக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன்னொரு பக்கம் நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட நகலை ஒரு எரிக்கின்றார் என்றால் இதை விட தேச துரோகச் செயல் வேறு இருக்க முடியும்..? அவருக்கு பெண்கள் மீது எவ்வளவு வன்மம். பெண்கள் எல்லாம் படிக்க கூடாது, வேலைக்கு போகக்கூடாது, முன்னேறக்கூடாது, எம்.எல்.ஏ.க்கள், எம்பியாக வரக் கூடாது என்று நினைக்கிறார்.

பிரேமலதா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியே தீருவோம் என்று சொல்கிறார். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். கடந்த ஒராண்டு காலம் பாமகவில் நடக்கிற குழப்பங்களுக்கு ஸ்டாலினும், அவரது மருமகன் சபரீசனும்தான் காரணம். இவர்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எங்கள் குடும்பத்தில் திட்டமிட்டு குழப்பம் செய்திருக்கிறார்கள்.

அதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கேடு கெட்ட ஊழல் ஆட்சியை அகற்றுங்கள். இபிஎஸ்ஸை முதலமைச்சராகக் கொண்டு வாருங்கள்” எனப் பேசினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI ADMK தவெக AMMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் AIADMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN PMK பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் கனமழை அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கோவை இந்திய அணி CONGRESS ரஜினிகாந்த் கைது UDHAYANIDHI STALIN தமிழகம் சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி சீமான் EDAPPADI PALANISWAMI COIMBATORE முக ஸ்டாலின் KEERTHY SURESH THIRUMAVALAVAN INDIAN CRICKET TEAM கொலை தேவர் அமமுக வன்னியர் OPS கொரோனா NELLAI நெல்லை மதுரை ஓபிஎஸ் TAMIL ACTRESS AJITH PARLIAMENT ELECTION சூர்யா தென்காசி தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை SURIYA தூத்துக்குடி CSK மோடி BIGG BOSS TAMIL ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS கள்ளக்காதல் விடுமுறை திருப்பரங்குன்றம் அன்புமணி கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI அஜித் TAMILAGA VETTRI KAZHAGAM தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை