POLLING FLAMES

 

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை உயர்வு - அமைச்சர் உதயநிதி

1 year ago 27 ஜூன் 2024 10:50 AM | views : 236
சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-திமுக ஆட்சிக்கு வந்தபின் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.102 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கூடுதல் விளையாட்டுகள் இந்தாண்டு சேர்க்கப்படும்.

கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மினி ஸ்டேடியம் அமைக்கப்படாத சட்டமன்ற தொகுதிகளில் ஸ்டேடியம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 210 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.கடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 16 பேர் தேர்வு பெற்றுள்ளனர். கடந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த முறை ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் கோவையைச் சேர்ந்த சைக்கிளிங் வீராங்கனை தமிழரசிக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் அதிநவீன சைக்கிள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதன் விளைவாக 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை தமிழரசி வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை மத்தியப்பிரதேசத்தில் நடத்த ரூ.25 கோடியை அம்மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கியது.

ஆனால் தமிழ்நாட்டில் நடத்த ரூ.10 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட், கிரிக்கெட் என்றால் தோனி, அதைபோல் அரசியல் களம் என்றால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN கனமழை பாமக காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH சீமான் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் THIRUMAVALAVAN நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் சூர்யா AJITH ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS NELLAI SURIYA RAJINIKANTH திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION மதுரை தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை அன்புமணி தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி CSK கள்ளக்காதல் விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ்