POLLING FLAMES

 

தேனி: நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 years ago 10 ஏப்ரல் 2024 03:29 AM | views : 255
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தேனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வனை ஆதரித்து இன்று பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், தேனியில் நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.பெரியகுளம் பகுதியில் நடைபயிற்சியின்போது அங்குள்ள உழவர் சந்தையில் பொதுமக்களை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN TAMIL NADU ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் இந்திய அணி AIADMK PMK காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM தமிழகம் அன்புமணி ராமதாஸ் CONGRESS EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION திருமாவளவன் கொலை COIMBATORE KEERTHY SURESH தமிழ்நாடு சீமான் AJITH அமமுக பிரதமர் மோடி கைது TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் OPS ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் SURIYA THIRUMAVALAVAN நெல்லை TAMIL ACTRESS கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் NELLAI சூர்யா BIGG BOSS TAMIL அஜித் ELECTION COMMISSION நடிகை வடகிழக்கு பருவமழை பாலியல் தொல்லை தென்காசி தூத்துக்குடி அன்புமணி RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் CSK விடுமுறை கள்ளக்காதல் மதுரை தீபாவளி