பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்த நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, 'ஸ்ரீபெரும்புதூரில் இருக்க கூடிய அன்பு சொந்தங்களே நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ஒருத்தர் சம்பந்தமே இல்லாம 1980-ல் பேசியதே பேசுறாங்க. இந்தி, சமஸ்கிருதம், இது, அது, வடக்கு தெற்கு-ன்னு. இன்னும் இந்த பிஞ்சி போன செருப்ப அவங்க தூக்கி எரியலைங்க. இது தி.மு.க.' என்று பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S