Tamil News & POLLING

 

தேர்தல் வந்தால் மட்டுமே தி.மு.க.விற்கு தமிழ் உணர்வு வரும்: அண்ணாமலை தாக்கு

1 year ago 30 மார்ச் 2024 08:34 AM | views : 149
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- வழக்கம்போல, எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், தேர்தல் நடைபெறும் நேரங்களிலும் மட்டுமே திமுகவினருக்கு வரும் தமிழ் உணர்வு, தற்போது பாராளுமன்றத் தேர்தல் நேரத்திலும் வந்திருப்பது ஆச்சரியமில்லை. கடந்த 70 ஆண்டுகளாக, தமிழ் மொழியை வியாபாரமாக்கித் தமிழகத்தைச் சுரண்டிக் கொழுத்த திமுகவின் தமிழுணர்வு நாடகத்தை, தமிழக மக்கள் இனியும் நம்புவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைப்பாரேயானால், அவருக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும்.

தமது தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என்றும், தமிழ் மொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்தும் நமது பிரதமர் மோடி, வருத்தம் தெரிவித்திருந்ததை, முதலமைச்சர் ஸ்டாலின் கேலி செய்திருக்கிறார். மோடி இன்று, நேற்று இதனைக் கூறவில்லை. திமுகவினரைப் போல, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போல, ஸ்டாலின் போல, மொழியை வைத்து நடத்தும் வியாபார அரசியலைச் செய்ய வேண்டிய அவசியம், மோடிக்கு இல்லை. அவர் இந்தியாவின் பிற மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், தமிழ் மொழி தான் தொன்மையான, இனிமையான மொழி என்று பெருமையுடன் கூறி வருகிறார். பல ஆண்டுகளாக, இந்தியாவின் பல மாநிலங்களில் பேசும்போதும், உலக அரங்கில் பல நாடுகளில் பேசும்போதும், பல மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், ஏன், ஐநா சபையில் பேசும்போது கூட, உலகின் தொன்மையான மொழியான தமிழ், என் நாட்டின் மொழி என்று பெருமையுடனேயே கூறியிருக்கிறார்.

தமிழ் மொழியின் பெருமையை, தமிழகத்தின் பெருமையை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறார். உலக நாடுகளின் தலைவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து, தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரத்தை பறைசாற்றியிருக்கிறார். பிரதமர் மோடி. தமிழ் மீது கொண்டுள்ள பற்றுக்கும், தமிழகத்தின் மீது கொண்டுள்ள அன்புக்கும், ஸ்டாலின் அவர்களின் சான்றிதழ் அவசியமில்லாதது. அர்த்தமற்றது.ஆகாசவாணி என்பது, பிரசார் பாரதி நிறுவனத்தின் வானொலிப் பிரிவின் பெயர்.

இன்று நேற்றல்ல. சுமார் 70 ஆண்டுகளாக, ஆகாசவாணி என்பதாகத்தான் இருக்கிறது. ஸ்டாலின் இன்று எதிர்க்கட்சியாக, தேர்தல் நேரத்தில் மட்டுமே காட்டும் தமிழ் ஆர்வத்தில் சிறிதேனும், பத்து ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில், பசையான பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்தபோது காட்டியிருந்தால், தமிழக மக்கள் இந்த நாடகத்தை நம்பியிருப்பார்கள். எனவே தேர்தல் நேர நாடகங்களை நிறுத்திவிட்டு, உண்மையாகவே ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும், தேசியக் கல்விக் கொள்கையை தமிழகப் பள்ளிகளில் அமல்படுத்தி, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும், கட்டாயமாக தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை வழங்க முன்வர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AMMK TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் MK STALIN TTV DHINAKARAN AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS PMK முக ஸ்டாலின் சீமான் CONGRESS UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை இந்திய அணி தமிழகம் INDIAN CRICKET TEAM பாமக ரஜினிகாந்த் கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION SEEMAN தீபாவளி கைது சட்டசபை தேர்தல் அமமுக COIMBATORE EDAPPADI PALANISWAMI கோவை வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH கள்ளக்காதல் NELLAI திருமாவளவன் நெல்லை மதுரை TAMIL ACTRESS AJITH விடுமுறை தமிழ்நாடு THIRUMAVALAVAN ஓபிஎஸ் திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி திருப்பரங்குன்றம் டிரெண்டிங் டாப் நியூஸ் MADURAI அஜித் THOOTHUKUDI நயினார் நாகேந்திரன் 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ் தேவர் ELECTION COMMISSION நாடாளுமன்ற தேர்தல் OPS நடிகை வன்னியர் ASSEMBLY ELECTIONS வானிலை ஆய்வு மையம் தமிழக அரசு