POLLING FLAMES

 

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்!

2 years ago 21 மார்ச் 2024 08:39 AM | views : 245
நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில் அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள நெல்லை வேட்பாளர் சிம்லா முத்து சோழன் மார்ச் 7ஆம் தேதி தான் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவருக்கு உடனடியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே யார் இந்த சிம்லா முத்து சோழன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக துணை பொதுச்செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன், இவர் .ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு பலமுறை வெற்றிபெற்றுள்ளார். இதனைடுத்து 2016ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா களம் இறங்கினார். இவருக்கு டப் கொடுக்க எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழனை திமுக களம் இறக்கியது. ஒரு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் வெற்றி வித்தியாசம் குறைந்தபட்சம் 50ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். ஆனால் சிம்லா முத்து சோழனில் களப்பணியால் 30ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலையே ஜெயலலிதாவால் வெற்றி பெற் முடிந்தது.

ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார். எனவே அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தலிகளில் திமுக வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்த்தார். ஆனால் திமுக சார்பாக வாய்ப்பு வழங்கவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் சிம்லா முத்துசோழன் இணைந்தார். இதனையடுத்து தற்போது அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலில் நெல்லை வேட்பாளராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS TAMIL NADU TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK காங்கிரஸ் UDHAYANIDHI STALIN பாமக CONGRESS அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் தமிழகம் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM கோவை COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை பிரதமர் மோடி கைது அமமுக OPS தேவர் தமிழ்நாடு AJITH வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் KEERTHY SURESH நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் SURIYA கொரோனா BIGG BOSS TAMIL சூர்யா THIRUMAVALAVAN TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை தென்காசி தூத்துக்குடி திருப்பரங்குன்றம் விடுமுறை RAJINIKANTH பாலியல் தொல்லை அஜித் அன்புமணி ELECTION COMMISSION தீபாவளி மதுரை CSK கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ்