Tamil News & polling
அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று தேமுதிக புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது.
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புரட்சி பாரதம் கட்சிக்கு விழுப்புரம் தொகுதியும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு தேனி அல்லது மயிலாடுதுறை தொகுதி ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவை பொறுத்தவரை கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் உள்ளிட்ட 4 தொகுதிகள் ஒதுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் பா ம க இடம் பெறாததால் தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், தேமுதிக கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதா என்பதற்கு இன்று விடை தெரிந்துவிடும்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress