POLLING FLAMES

 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு!

2 years ago 14 மார்ச் 2024 09:04 AM | views : 241
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது.தேர்தல் ஆணையத்திலும் பல்வேறு புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று புகழேந்தி தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி தற்போது என்ன நிவாரணம் வேண்டும் என தெரிவியுங்கள் என்றார். தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ளதால், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு அ.தி.மு.க. கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனித்தனி புகார்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கி உள்ளோம். ஆனால் அதன் மீது தேர்தல் ஆணையம் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று புகழேந்தி தரப்பில் கோரப்பட்டது.இதையடுத்து தற்போது அ.தி.மு.க கட்சி இரண்டு அணிகளாக உள்ளதா?அதனால் தான் இரு தரப்பும் அ.தி.மு.க.வை உரிமை கோருகிறீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து அ.தி.மு.க தரப்பு வழக்கறிஞரான பாலாஜி சீனிவாசன் வாதிடும் போது கூறியதாவது:-அ.தி.மு.க என்பது ஒரே அணிதான், எந்த அணிகளும் அ.தி.மு.க.வுக்கு இல்லை.இதை பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. குறிப்பாக என்.சி.பி. கட்சி வழக்கை எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ளலாம், ஏனெனில் யாருக்கு 'மெஜாரிட்டி' உள்ளதோ அவர்களுக்கே கட்சியும், சின்னமும். அதன் அடிப்படையில்தான் இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும்.

அந்த வகையில் அ.தி.மு.க. கட்சிக்கோ, சின்னத்துக்கோ எந்த பிரச்சனையும் இல்லை.இந்த நபருக்கு ஏதேனும் கோரிக்கை உள்ளதென்றால் அதனை தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம். அதில் நியாயம் இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.மேலும் புகழேந்தி ஒரு அடிப்படை உறுப்பினர் கிடையாது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எனவே அவருக்கு எந்த உரிமையும் இல்லை.அ.தி.மு.க.வின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்துள்ளது. அதேபோல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பக்கம் உள்ளனர்.எனவே பெரும்பான்மை அடிப்படையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. எனவே இந்த விவகாரத்தில் புகழேந்தி வருவதற்கு எந்த உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதி இந்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM OPS KEERTHY SURESH பிரதமர் மோடி AJITH அமமுக கைது தேவர் சீமான் தமிழ்நாடு வன்னியர் THIRUMAVALAVAN சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் SURIYA ELECTION COMMISSION விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி திருப்பரங்குன்றம் அஜித் RAJINIKANTH மதுரை CSK வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அன்புமணி தூத்துக்குடி