Tamil News & POLLING

 

அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே 17-ந் தேதிக்குள் உடன்பாடு ஏற்படுகிறது: 4 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு

2 years ago 14 மார்ச் 2024 09:05 AM | views : 176
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு. தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தனர்.இதன் பின்னர் தே.மு. தி.க. குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு நேரில் சென்று பேசினார்கள்.

2-ம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம் என்று கூறினார்கள்.ஆனால் பிரேமலதா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்தார். இதனால் குழப்பம் நிலவியது.இருப்பினும் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடை பெற்று வந்துள்ளது. 7 எம்.பி. தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தே.மு.தி.க. கேட்டுள்ளது.

இதில் 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருகிற 17-ந் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி 3-வது கட்டமாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதன் பின்னர் 2 கட்சிகளின் நிர்வாகிகளும் தொகுதி உடன்பாடு தொடர்பாக நேரில் சந்தித்து கையெழுத்து போட உள்ளனர்.பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN AIADMK காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி ADMK TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS PMK கனமழை தமிழகம் ரஜினிகாந்த் சீமான் CONGRESS UDHAYANIDHI STALIN பாமக அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கைது வடகிழக்கு பருவமழை அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE கோவை கொலை SEEMAN KEERTHY SURESH சட்டசபை தேர்தல் தீபாவளி TAMIL ACTRESS கள்ளக்காதல் தென்காசி THIRUMAVALAVAN NELLAI நெல்லை திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி மதுரை ஓபிஎஸ் தமிழ்நாடு AJITH விடுமுறை THOOTHUKUDI திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP ASSEMBLY ELECTIONS OPS SENGOTTAIYAN நயினார் நாகேந்திரன் வானிலை ஆய்வு மையம் வன்னியர் டாப் நியூஸ் பாலியல் தொல்லை MADURAI NORTHEAST MONSOON தேவர் டிரெண்டிங் தமிழக அரசு அஜித்