POLLING FLAMES

 

ஓபிஎஸ் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் - ஈபிஎஸ் அறிவுறுத்தல்

3 years ago 28 டிசம்பர் 2022 02:34 AM | views : 245
ஓ.பன்னீர்செல்வம் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தரப்பினர் கூறும் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை போல நாடாளுமன்றத் தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டாக வலியுறுத்தினர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். பற்றியும் யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என்றும் தமிழக மக்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கட்சியின் சட்டப் போராட்டங்களை குறித்து கவலைக் கொள்ளாமல், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் அறிவுறுத்திய ஈபிஎஸ், தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிராளிகளை வீழ்த்துவது உறுதி எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனவே, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்குமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவில் உட்கட்சி பிரச்னை இல்லை என்றும், அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என உறுதிபடத் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் இந்திய அணி TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK CONGRESS கோவை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI தமிழகம் COIMBATORE திருமாவளவன் பிரதமர் மோடி KEERTHY SURESH தேவர் வன்னியர் தமிழ்நாடு AJITH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM OPS அமமுக கைது ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் சூர்யா SURIYA TAMIL ACTRESS THIRUMAVALAVAN நெல்லை கொரோனா NELLAI தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை மதுரை ELECTION COMMISSION அஜித் திருப்பரங்குன்றம் தென்காசி கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி தூத்துக்குடி கள்ளக்காதல் RAJINIKANTH வடகிழக்கு பருவமழை