Tamil News & POLLING

 

பொங்கல் பரிசு தொகுப்பு : இன்று முதல் வீடு தேடி வரும் டோக்கன்... அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு!

3 years ago 27 டிசம்பர் 2022 05:40 AM | views : 174
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் பெறுவதற்கான டோக்கன்களை இன்றும் நாளையும் வீடுவீடாக விநியோகம் செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது.

பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் இன்றும் நாளையும் விநியோகம் செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ம் தேதி சென்னையில் முதலமைச்சரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AMMK ADMK TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் AIADMK தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் சீமான் தமிழகம் கனமழை ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக கொலை பிரதமர் மோடி கைது PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI SEEMAN தீபாவளி சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை அமமுக KEERTHY SURESH கோவை THIRUMAVALAVAN TAMIL ACTRESS திருமாவளவன் மதுரை விடுமுறை AJITH தென்காசி ஓபிஎஸ் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் NELLAI நெல்லை திருநெல்வேலி அஜித் தமிழக அரசு NORTHEAST MONSOON MADURAI THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் வன்னியர் திருப்பரங்குன்றம் நயினார் நாகேந்திரன் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION வானிலை ஆய்வு மையம் OPS 2024 T20 WORLDCUP டிரெண்டிங் தேவர் டாப் நியூஸ்