POLLING FLAMES

 

துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பில் உதயநிதி..!

3 years ago 29 டிசம்பர் 2022 08:22 AM | views : 236
துணை முதலமைச்சர் பதவிக்கு நிகரான பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் கையாண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருக்கிறார்.

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் மேடையில் பேசினார். அப்போது, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை என்பது கிட்டதட்ட துணை முதல்வர் பதவிக்கு நிகரானது என அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் மட்டுமல்ல அவர் துணை முதலமைச்சருக்கு நிகரானவர் என்பதை தெரிவித்துள்ளார்.

இதேபோல் முதல்வர் ஸ்டாலினை வரவேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னையில் அலுவல் கோட்டை இருந்தாலும் உங்களின் அன்புக் கோட்டை திருச்சி தான் எனக் கூறினார். ஆங்கில புத்தாண்டு பரிசாக திருச்சி மாவட்டத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தங்களை பொறுத்தவரை முதல்வரின் வருகையால் இன்று முதலே புத்தாண்டு தான் என அவர் குறிப்பிட்டார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK இந்திய அணி கனமழை தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் PMK பாமக முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI தமிழகம் பிரதமர் மோடி KEERTHY SURESH கைது TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு வன்னியர் அமமுக சீமான் தேவர் OPS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN NELLAI சூர்யா நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் AJITH கொரோனா ஓபிஎஸ் TAMIL ACTRESS SURIYA BIGG BOSS TAMIL மதுரை அஜித் ELECTION COMMISSION RAJINIKANTH கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை தென்காசி அன்புமணி விடுமுறை CSK தீபாவளி பாலியல் தொல்லை தூத்துக்குடி