Tamil News & POLLING

 

மு.க.ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் அ.தி.மு.க.

14 hours ago 29 மார்ச் 2026 05:25 AM | views : 83

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26. பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.


முன்னதாக அ.தி.மு.க. இதுவரை 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்டிருந்தநிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 17 பேர் கொண்ட இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.


இதன்படி 3ம் கட்டமாக வெளியிட்டப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் சென்னையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் உள்பட, 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


வேட்பாளர்களின் விவரம்:-

  • 1.ஆயிரம் விளக்கு - பா.வளர்மதி
  • 2.அண்ணாநகர் - கோகுல இந்திரா
  • 3.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி- ஆதி ராஜாராம்
  • 4.திட்டக்குடி (தனி) - முருகுமாறன்
  • 5.துறைமுகம் - ராயபுரம் ஆர்.மனோ
  • 6.விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி
  • 7.தியாகராயநகர் - சத்தியநாராயணன்
  • 8.வேளச்சேரி - எம்.கே.அசோக்
  • 9.சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
  • 10.ஆர்.கே.நகர் - ஆர்.எஸ். ராஜேஷ்
  • 11.வில்லிவாக்கம் - எஸ்.ஆர்.விஜயகுமார்
  • 12.திருச்சுழி - ராஜவர்மன்
  • 13.ஆலந்தூர் - எஸ்.சரவணன்
  • 14.கொளத்தூர் - பி.சந்தான கிருஷ்ணன்
  • 15.திரு.வி.க நகர் (தனி) - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
  • 16. எழும்பூர் (தனி) - அபிஷேக் ரங்கசாமி
  • 17.ஆலங்குடி - தன.விமல்


மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதிகளில் களமிறங்கும் அ.தி.மு.க.அ.தி.மு.க. வெளியிட்டுள்ள இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து சந்தான கிருஷ்ணனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து ஆதிராஜராமும் போட்டியிட உள்ளனர்.


கடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூரில் எதிர்கொண்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஆதி ராஜாராமை, இம்முறை சேப்பாக்கத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே 2006ம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு 2,468 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார். அதே நேரம் கடந்த 2021 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக களமிறங்கிய இவர், 35,138 வாக்குகளை மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK AIADMK எடப்பாடி பழனிசாமி TAMIL NADU MK STALIN ADMK TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் PMK முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் பாமக பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் CONGRESS EDAPPADI PALANISWAMI காங்கிரஸ் ரஜினிகாந்த் கைது கோவை இந்திய அணி INDIAN CRICKET TEAM கனமழை சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN சீமான் தமிழ்நாடு கொலை திருமாவளவன் PARLIAMENT ELECTION COIMBATORE பிரதமர் மோடி AJITH அமமுக KEERTHY SURESH தீபாவளி வடகிழக்கு பருவமழை நெல்லை THIRUMAVALAVAN தென்காசி NELLAI வன்னியர் TAMIL ACTRESS தேவர் ASSEMBLY ELECTIONS TAMILAGA VETTRI KAZHAGAM MADURAI கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் NORTHEAST MONSOON PRIME MINISTER MODI CSK SURIYA மதுரை தூத்துக்குடி டிரெண்டிங் கள்ளக்காதல் விடுமுறை அஜித் பாலியல் தொல்லை SEEMAN OPS ஓபிஎஸ் நடிகை டாப் நியூஸ்