POLLING FLAMES

 

எம்எல்ஏ உதவியாளரை தாக்கிய அமைச்சர் நாசர்! வைரலாகும் வீடியோவால் அறிவாலயம் அப்செட்..!!

3 years ago 01 டிசம்பர் 2022 04:33 AM | views : 263
திமுக எம்எல்ஏவின் உதவியாளரை மேடையில் வைத்து அமைச்சர் நாசர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் நாசர், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ் மொழி குறித்து அமைச்சர் நாசர் மேடையில் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திருத்தணி எம்எல்ஏ உதவியாளரான சதீஷ், மேடையில் நகர்ந்து செல்லும் போது, தவறுதலாக கைபட்டு, மைக் கீழே விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் பேசுவதை நிறுத்தி விட்டு, சதீஷை ஓங்கி அடித்தார். இதனால், மனமுடைந்த அவர் மேடையில் இருந்து கீழே இறங்கி விட்டார்.

மேடையில் பொறுமையிழந்து அமைச்சர் நாசர் செய்த செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிரும் எதிர்கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள், அமைச்சர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே, அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளால் முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கமின்றி தவித்து வருவதாக அவரே கூறியிருந்த நிலையில், அடுத்ததாக அமைச்சர் நாசரின் செயல் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM கோவை PARLIAMENT ELECTION கொலை COIMBATORE திருமாவளவன் EDAPPADI PALANISWAMI OPS தேவர் பிரதமர் மோடி சீமான் அமமுக தமிழ்நாடு கைது KEERTHY SURESH AJITH வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS SURIYA தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா NELLAI THIRUMAVALAVAN ஓபிஎஸ் நெல்லை சட்டசபை தேர்தல் தென்காசி மதுரை திருப்பரங்குன்றம் CSK ELECTION COMMISSION பாலியல் தொல்லை RAJINIKANTH தீபாவளி கீர்த்தி சுரேஷ் அன்புமணி வடகிழக்கு பருவமழை விடுமுறை கள்ளக்காதல் தூத்துக்குடி அஜித்