சென்னை - பெங்களூரு இடையேயான புல்லட் ரயில் சேவையால் பயண நேரம் 73 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது, "புல்லட் ரயில் நம் அனைவரின் கனவுத் திட்டம். இந்தச் சேவை, நமது பயண நேரத்தைக் குறைத்து, முக்கிய நகரங்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலத்தை உருவாக்கும்.
புல்லட் ரயில் சேவையால், அமராவதி - ஹைதராபாத் இடையேயான பயண நேரம் வெறும் 70 நிமிடங்களாகக் குறைக்கப்படும். அமராவதி - சென்னை இடையேயான பயணமும் 112 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.ஹைதராபாத் - புணே இடையே 1 மணி 55 நிமிடங்களும், புணே - மும்பை இடையே 48 நிமிடங்களும், ஹைதராபாத் - பெங்களூரு இடையே 2 மணி 8 நிமிடங்களாகவும், அமராவதி - ஹைதராபாத் இடையே 70 நிமிடங்களும், சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் 73 நிமிடங்களாகவும் இருக்கும். சென்னை - பெங்களூரு இடையேயான திட்டம் விரைவில் தொடங்கப்படும்.இந்த அதிவேக ரயில் சேவையானது, முக்கிய நகரங்களை இணைத்து, குறிப்பிடத்தக்க முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.
« முந்தைய செய்தி (Previous)
விசில் சத்தம் 200-ஐ தாண்டும் என்பது ஓவர்: தமிழிசை...அடுத்த செய்தி (Next) »
IPL 2026 | ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 223 ரன்கள் இலக்கு...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: