Tamil News & POLLING

 

சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...

8 months ago 18 ஜூலை 2025 02:38 PM | views : 151
நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா திமுகவினர்? என சாடியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழைத் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும் எளிய மக்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் பல லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுவதன் பின்னணியில் திமுக நிர்வாகி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.


தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையிலும் தொடர்பிலிருந்த திமுகவினர், தற்போது சட்டவிரோத சிறுநீரகத் திருட்டு சம்பவங்களுக்கும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டிருப்பதன் மூலம், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையும் கடிக்கும் சூழலுக்கு திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று கேட்கத் தோன்றுகிறது.

எனவே, ஏழைத் தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட திமுக நிர்வாகி, உடந்தையாக இருந்த தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறுநீரகத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்..

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI ADMK AMMK AIADMK TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் காங்கிரஸ் கனமழை தமிழகம் இந்திய அணி INDIAN CRICKET TEAM PMK UDHAYANIDHI STALIN சீமான் பாமக ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி CONGRESS கொலை கைது COIMBATORE அமமுக EDAPPADI PALANISWAMI தீபாவளி கோவை PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை NELLAI KEERTHY SURESH சட்டசபை தேர்தல் நெல்லை கள்ளக்காதல் தமிழ்நாடு திருநெல்வேலி THOOTHUKUDI TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை AJITH தென்காசி விடுமுறை THIRUMAVALAVAN SEEMAN TAMIL ACTRESS OPS திருமாவளவன் வன்னியர் திருப்பரங்குன்றம் MADURAI அஜித் SENGOTTAIYAN டிரெண்டிங் டாப் நியூஸ் 2024 T20 WORLDCUP கொரோனா TAMIL CINEMA ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் தமிழக அரசு நடிகை ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION NORTHEAST MONSOON தேவர்