Tamil News & POLLING

 

மதுசூதனன் காலமானார்: அதிமுகவினர் அதிர்ச்சி!

4 years ago 05 ஆகஸ்ட் 2021 11:06 AM | views : 170
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 81. மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக இன்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

தீவிர எம்ஜிஆர் விசுவாசியான மதுசூதனன் 1991ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது மட்டுமல்லாமல், ஜெயலலிதா கேபினட்டில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதிமுகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளராகவும் மதுசூதனன் பொறுப்பு வகித்துள்ளார். 2010ஆம் ஆண்டு அதிமுகவின் அவைத்தலைவராக பொறுப்புக்கு வந்தார். தனது அரசியல் பயணம் முழுக்க மாவட்ட செயலாளர் முதல் அவைத் தலைவர் வரை அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பெருமை மதுசூதனனுக்கு உண்டு.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் மதுசூதனன் இணைந்தார். அதிமுக ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு கட்சியின் அவைத்தலைவர் பொறுப்புக்கு மதுசூதனன் மீண்டும் வந்தார்.





இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி AIADMK MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK கனமழை ரஜினிகாந்த் இந்திய அணி UDHAYANIDHI STALIN சீமான் தமிழகம் INDIAN CRICKET TEAM பாமக பிரதமர் மோடி கொலை CONGRESS அன்புமணி ராமதாஸ் கைது கோவை EDAPPADI PALANISWAMI அமமுக தீபாவளி PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை COIMBATORE KEERTHY SURESH சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் கள்ளக்காதல் விடுமுறை TAMIL ACTRESS THIRUMAVALAVAN திருமாவளவன் தமிழ்நாடு திருநெல்வேலி தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI மதுரை AJITH நெல்லை SEEMAN வன்னியர் அஜித் தமிழக அரசு திருப்பரங்குன்றம் மழை 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON MADURAI OPS டாப் நியூஸ் டிரெண்டிங் தேவர் பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI ELECTION COMMISSION