Tamil News & POLLING

 

மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கும் இயக்குனர் சுந்தர்.சி: புதியநீதி கட்சி சார்பில் போட்டி

3 hours ago 28 மார்ச் 2026 06:10 AM | views : 96

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.


அ.தி.மு.க. - பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் சமீபத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்துகொள்ளவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசினார். இந்த முறை, அ.தி.மு.க. சார்பில் ஒரு தொகுதியும், பா.ஜ.க. சார்பில் இன்னொரு தொகுதியும் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது.



முதற்கட்டமாக, அ.தி.மு.க. சார்பில் மதுரை மத்தி தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. சார்பில் இன்னும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில், மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.



தமிழக பா.ஜ.க. துணை தலைவரான நடிகை குஷ்புவின் கணவரும், பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டவுடன் வரும் திங்கட்கிழமை இன்னொரு வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறார். அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்.

மதுரை மத்திய தொகுதியில் தற்போது தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.வாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



இதுதொடர்பாக புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.



மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி அவர்கள் சன் ஆப் சிதம்பரம் பிள்ளை வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். 30.3.2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம். இடம் நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY சென்னை அதிமுக CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK TAMIL NADU AIADMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN ADMK மு.க.ஸ்டாலின் PMK பாமக பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் தமிழகம் காங்கிரஸ் CONGRESS முக ஸ்டாலின் கனமழை சட்டசபை தேர்தல் சீமான் கோவை UDHAYANIDHI STALIN கொலை EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு COIMBATORE INDIAN CRICKET TEAM இந்திய அணி அமமுக AJITH தீபாவளி KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது ASSEMBLY ELECTIONS தேவர் விடுமுறை வன்னியர் தென்காசி TAMIL ACTRESS திருமாவளவன் நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI நடிகை திருப்பரங்குன்றம் ஓபிஎஸ் CSK THIRUMAVALAVAN OPS SURIYA டிரெண்டிங் திருநெல்வேலி SEEMAN PRIME MINISTER MODI கொரோனா NORTHEAST MONSOON TAMIL CINEMA அஜித் கள்ளக்காதல் மதுரை டாப் நியூஸ் MADURAI கீர்த்தி சுரேஷ்