Tamil News & POLLING

 

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

1 year ago 15 மே 2024 04:33 PM | views : 144
நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் அதிக அளவு மழைநீர் தேங்கி நின்றது. அப்போது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, தரைப்பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் சிக்கி பழுதடைந்தது. அந்த பேருந்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 65-க்கும் மேற்பட்ட பயணிகள் தண்ணீருக்கு நடுவே சிக்கி தவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து வள்ளியூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தில் சிக்கிய பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இதைத் தொடர்ந்து பழுதடைந்த பேருந்து அங்கிருந்து மீட்டுக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AMMK டிடிவி தினகரன் AIADMK MK STALIN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ADMK TTV DHINAKARAN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி PMK ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் தமிழகம் பாமக INDIAN CRICKET TEAM இந்திய அணி ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS சீமான் கனமழை UDHAYANIDHI STALIN கைது பிரதமர் மோடி கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் அமமுக சட்டசபை தேர்தல் SEEMAN EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH கோவை COIMBATORE வடகிழக்கு பருவமழை தீபாவளி நெல்லை கள்ளக்காதல் THIRUMAVALAVAN TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI விடுமுறை திருமாவளவன் AJITH தமிழ்நாடு மதுரை திருநெல்வேலி ஓபிஎஸ் தென்காசி MADURAI டிரெண்டிங் THOOTHUKUDI வன்னியர் நாடாளுமன்ற தேர்தல் தமிழக அரசு கீர்த்தி சுரேஷ் டாப் நியூஸ் 2024 T20 WORLDCUP நடிகை திருப்பரங்குன்றம் ASSEMBLY ELECTIONS தேவர் வானிலை ஆய்வு மையம் OPS அஜித் ELECTION COMMISSION நயினார் நாகேந்திரன் NORTHEAST MONSOON