Tamil News & POLLING

 

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

1 year ago 16 மே 2024 10:37 AM | views : 150
அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை வழக்கம்போல அலட்சியமாக எதிர்கொள்ளாமல், கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதோடு, கனமழை தொடரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள், மீட்பு மற்றும் நிவாரண முகாம்கள் முன்கூட்டியே தயாராக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.மேலும், வானிலை ஆய்வு மையத்துடன் முறையான தொடர்பில் இருந்து, அவர்கள் விடுக்கும் எச்சரிக்கையை சரிவர கண்காணித்து அடுத்து வரும் சில தினங்களில் பெய்யக்கூடிய மழையின் அளவை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதோடு, மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்தும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AMMK ADMK TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் AIADMK தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் சீமான் தமிழகம் கனமழை ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION கொலை பிரதமர் மோடி கைது அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கோவை SEEMAN தீபாவளி சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை அமமுக KEERTHY SURESH COIMBATORE திருமாவளவன் TAMIL ACTRESS THIRUMAVALAVAN மதுரை தென்காசி விடுமுறை AJITH ஓபிஎஸ் TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு திருநெல்வேலி கள்ளக்காதல் NELLAI நெல்லை திருப்பரங்குன்றம் தமிழக அரசு NORTHEAST MONSOON MADURAI 2024 T20 WORLDCUP வன்னியர் THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் அஜித் வானிலை ஆய்வு மையம் நயினார் நாகேந்திரன் ASSEMBLY ELECTIONS தேவர் டாப் நியூஸ் டிரெண்டிங் OPS ELECTION COMMISSION