POLLING FLAMES

 

சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல்

2 years ago 03 மே 2024 11:52 AM | views : 255
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கையும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது குறித்த தீர்மானம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்மானம் செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை CONGRESS திருமாவளவன் COIMBATORE கொலை தமிழகம் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI அமமுக OPS வன்னியர் பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு சீமான் தேவர் KEERTHY SURESH கைது தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் நெல்லை TAMIL ACTRESS கொரோனா THIRUMAVALAVAN NELLAI ஓபிஎஸ் AJITH SURIYA தீபாவளி சூர்யா BIGG BOSS TAMIL RAJINIKANTH வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION மதுரை தூத்துக்குடி அஜித் கள்ளக்காதல் தென்காசி கீர்த்தி சுரேஷ் அன்புமணி திருப்பரங்குன்றம் விடுமுறை CSK