Tamil News & POLLING

 

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

1 year ago 06 மே 2024 04:57 AM | views : 152
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.

வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு தேர்வு முடிவை வெளியிட்டனர். மொத்தம் 94.56 சதவீதம் பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 ஆக அதிகரித்துள்ளது

.7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும்போலவே மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் 92.37 சதவீதமும், மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:-
அரசுப் பள்ளிகள்: 91.32 சதவீதம் தேர்ச்சி.
அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49 சதவீதம் தேர்ச்சி.
தனியார் பள்ளிகள் 96.7 சதவீதம் தேர்ச்சி.
397 அரசுப் பள்ளிகளும், 2,478
தனியார் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை எந்தவித கட்டணமும் இன்றி அறிந்து கொள்ளலாம் எனவும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI AMMK MK STALIN ADMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU TTV DHINAKARAN காங்கிரஸ் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி AIADMK உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் PMK தமிழகம் இந்திய அணி கனமழை CONGRESS UDHAYANIDHI STALIN சீமான் பாமக INDIAN CRICKET TEAM கொலை அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி தீபாவளி COIMBATORE கோவை சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH அமமுக கைது வடகிழக்கு பருவமழை SEEMAN TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS திருமாவளவன் ஓபிஎஸ் திருநெல்வேலி மதுரை AJITH தமிழ்நாடு கள்ளக்காதல் THIRUMAVALAVAN NELLAI தென்காசி நெல்லை விடுமுறை OPS தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் நடிகை அஜித் தேவர் டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் டிரெண்டிங் ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் THOOTHUKUDI NORTHEAST MONSOON 2024 T20 WORLDCUP பாலியல் தொல்லை ELECTION COMMISSION மழை MADURAI வன்னியர்