POLLING FLAMES

 

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ்- சுயேட்சை சின்னத்தில் போட்டி

2 years ago 21 மார்ச் 2024 04:07 PM | views : 244
தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இதில், 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. அவரே விரைவில் அறிவிப்பார் என அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம். அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர். தொண்டர்களின் பலத்தை அறிய ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளோம். அதனால், ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எங்களுக்குள் எந்தவித கருத்துவேறுபாடும் கிடையாது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் CONGRESS PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் COIMBATORE KEERTHY SURESH AJITH OPS வன்னியர் சீமான் அமமுக பிரதமர் மோடி தேவர் தமிழ்நாடு கைது TAMILAGA VETTRI KAZHAGAM BIGG BOSS TAMIL NELLAI நெல்லை சட்டசபை தேர்தல் சூர்யா TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் THIRUMAVALAVAN SURIYA விடுமுறை RAJINIKANTH ELECTION COMMISSION தீபாவளி அஜித் தூத்துக்குடி மதுரை அன்புமணி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தென்காசி வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம் CSK கள்ளக்காதல்