POLLING FLAMES

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது - அமலாக்கத்துறை அதிரடி

2 years ago 21 மார்ச் 2024 04:00 PM | views : 275
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல் மந்திரி கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU AIADMK இந்திய அணி PMK ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை கோவை CONGRESS முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM தமிழகம் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை COIMBATORE KEERTHY SURESH AJITH பிரதமர் மோடி தேவர் சீமான் கைது TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக வன்னியர் OPS தமிழ்நாடு கொரோனா TAMIL ACTRESS THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL SURIYA நெல்லை NELLAI ஓபிஎஸ் சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION மதுரை அஜித் கள்ளக்காதல் விடுமுறை RAJINIKANTH அன்புமணி திருப்பரங்குன்றம் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தீபாவளி தென்காசி CSK