POLLING FLAMES

 

அதிக நேரம் செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர் - பிளஸ் 2 மாணவர் எடுத்த விபரீத முடிவு

21 hours ago 30 ஏப்ரல் 2026 01:23 PM | views : 38

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பக்க நாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நந்தகுமார் (18 வயது). இவர் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதி இருந்தார். தேர்வு விடுமுறையில் வீட்டில் தொடர்ந்து அதிக நேரமாக செல்போன் பார்ப்பதை மாணவர் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் நந்தகுமாரை அவரது பெற்றோர் அதிக நேரம் செல்போன் பார்க்கக் கூடாது எனக்கூறி கண்டித்துள்ளனர்.


இதனால் மனமுடைந்த மாணவர் நந்தகுமார் எடப்பாடி அடுத்த தாதாபுரம் கிராமம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது பாட்டி லட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தொடர்ந்து சோகமாக இருந்த மாணவர் நந்தகுமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.


அக்கம் பக்கத்தினர், நந்தகுமாரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்ததை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் AIADMK PMK ANBUMANI RAMADOSS கனமழை பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் பாமக தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN தமிழகம் CONGRESS இந்திய அணி முக ஸ்டாலின் கோவை கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு திருமாவளவன் OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி COIMBATORE கைது சீமான் AJITH KEERTHY SURESH INDIAN CRICKET TEAM ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் மதுரை TAMIL ACTRESS தீபாவளி BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் தேவர் NELLAI நெல்லை வன்னியர் வடகிழக்கு பருவமழை கொரோனா THIRUMAVALAVAN RAJINIKANTH SURIYA அஜித் மோடி தூத்துக்குடி அன்புமணி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் CSK கீர்த்தி சுரேஷ் தென்காசி சூர்யா கள்ளக்காதல் விடுமுறை