POLLING FLAMES

 

பேனா சின்னம் அமைத்தால் உடைப்பேன் - கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் பேச்சால் பரபரப்பு!

3 years ago 31 ஜனவரி 2023 04:16 PM | views : 294
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் அருகே மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில், தொடர்ச்சியாக திமுகவினர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்துத்துறை சேவையை போற்றும் வகையில், சென்னை மெரினா கடலில், 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்கான, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தலைமையில், மாசு கட்டுப்பாடு வாரியம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மே 17 இயக்கம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நினைவுச்சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக பிரதிநிதி முனுசாமி, கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலையை விட உயரமாக கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. திருவள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா என கேள்வி எழுப்பியதால், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் கூட்டத்தினரை சமாதானப்படுத்தினர்.

நியூஸ் 18 தமிழுக்கு பேட்டியளித்த பொதுமக்களில் பலர் நினைவுச்சின்னம் அமைப்பதை ஆதரித்தும், எதிர்த்தும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

முன்னதாக, சமூக செயற்பாட்டாளர் முகிலன், நீண்ட நேரமாக மேடையில் பேசிக்கொண்டிருந்ததால் , காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் மேடையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.



இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய சீமான், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கடலில் நினைவுச்சின்னம் அமைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்தார். பள்ளிக்கூடங்களை சீரமைக்க காசு இல்லை என்பவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்க மட்டும் ஏது பணம் எனவும் பேனா சிலை அமைத்தால், அதை உடைப்பேன் எனவும் பேசினார். அப்போது, திமுகவினர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக தமிழகம் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM கோவை CONGRESS கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM OPS KEERTHY SURESH பிரதமர் மோடி AJITH கைது அமமுக தேவர் சீமான் வன்னியர் தமிழ்நாடு THIRUMAVALAVAN சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் SURIYA ஓபிஎஸ் ELECTION COMMISSION தீபாவளி விடுமுறை பாலியல் தொல்லை தென்காசி திருப்பரங்குன்றம் அஜித் RAJINIKANTH மதுரை CSK வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அன்புமணி தூத்துக்குடி