Tamil News & POLLING

 

சீமானுக்கு எதிரான நடிகையின் பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

1 year ago 03 மார்ச் 2025 07:11 AM | views : 166
விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சீமானுக்கு எதிரான வழக்கை புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது.

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​ஸார் பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் சீமான் மனு தாக்கல் செய்​தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதி​மன்​றம், 12 வாரத்​துக்​குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்​யு​மாறு உத்தர​விட்​டது. இது தொடர்பாக அனுப்பிய சம்மனில் குறிப்​பிட்​டபடி சீமான் காவல் நிலை​யத்​தில் ஆஜராக​வில்லை.


இதையடுத்து, நீலாங்​கரை​யில் உள்ள சீமான் வீட்​டின் கதவில் வியாழக்கிழமை மீண்​டும் சம்மன் ஒட்டப்​பட்​டது. அதில், பிப். 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. சிறிது நேரத்​தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்​தெறிந்​தார். இதையடுத்து, அவரைக் கைது செய்​வதற்​காக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்​ராஜேஷ் மற்றும் போலீ​ஸார் சீமான் வீட்டுக்குச் சென்​றனர்.




அப்போது, சீமான் வீட்​டில் பாது​காவலராகப் பணியாற்றி வரும் ஓய்வு​பெற்ற எல்லை பாது​காப்புப் படை வீரர் அமல்​ராஜ், போலீ​ஸாரை வீட்​டின் உள்ளே ​விடாமல் தடுத்து நிறுத்​தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்​கொண்டு உள்ளே சென்​றார். அப்போது, இரு தரப்​பினரிடையே தள்ளு​முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அமல்​ராஜை போலீ​ஸார் கைது செய்ய முயன்​ற​தால், அவர்​களிடையே மோதல் ஏற்பட்​டது. தொடர்ந்து, ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீ​ஸார் அமல்​ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்​துச் சென்று, காவல் துறை ஜீப்​பில் ஏற்றிவ்கைது செய்​தனர். கைது செய்​யப்​பட்ட அமல்​ராஜ் மற்றும் சுபாகர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவு​களில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதனையடுத்து 28ம் தேதி இரவு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி, போலீஸாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சீமான்.


இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரை, 12 வாரங்களுக்குள் புலன் விசாரணை நடத்தி காவல் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சீமானுக்கு எதிரான வழக்கை புலன்விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது. மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.



இடைக்காலமாக விசாரணை ஏதும் மேற்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இருவருக்கும் இடையேயான பிரச்சனையை பேசி தீர்க்க வாய்ப்புள்ளதா? என ஆராய்ந்து செயல்படவும், வழக்கை சமரசமாக பேசித் தீர்க்க 2 மாதங்கள் அவகாசம் வழங்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AMMK AIADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM PMK தமிழகம் கனமழை UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் பாமக சீமான் CONGRESS அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அமமுக கொலை EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை தீபாவளி COIMBATORE சட்டசபை தேர்தல் NELLAI கோவை KEERTHY SURESH கைது TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை கள்ளக்காதல் தமிழ்நாடு SEEMAN திருநெல்வேலி தென்காசி THIRUMAVALAVAN AJITH OPS திருமாவளவன் TAMIL ACTRESS மதுரை வானிலை ஆய்வு மையம் THOOTHUKUDI டிரெண்டிங் ASSEMBLY ELECTIONS 2024 T20 WORLDCUP தமிழக அரசு NORTHEAST MONSOON MADURAI அஜித் SENGOTTAIYAN ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் ஓபிஎஸ் வன்னியர் தேவர் நடிகை விடுமுறை TAMIL CINEMA டாப் நியூஸ் கொரோனா கீர்த்தி சுரேஷ்