POLLING FLAMES

 

மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - சீமான் அழைப்பு

6 months ago 23 அக்டோபர் 2025 09:34 AM | views : 335
சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சி தயாராகி வருகிறது.

அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" என்ற பெயரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி சீமான் திருச்சியில் மாநாட்டை நடத்துகிறார். இது தொடர்பாக சீமான், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

என் உயிரோடும் உறவோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். மாற்றம் என்பது சொல் அல்ல, செயல். இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. இது நம் இனத்தின் திருவிழா. எல்லோரும் கூடுவோம்.

தீய ஆட்சி முறை ஒழிய தூய ஆட்சி முறை மலர கேடுகெட்ட பணநாயகம் ஒழிய மாண்புமிக்க ஜனநாயகம் மலர அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி எப்போதும் வெல்லும். நமது வெற்றி அதை சொல்லும். திருச்சியில் திரள்வோம். தீந்தமிழ் இனத்தீரே.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்களை காக்கும் வகையில் மலைகள், மரங்களின் மாநாடு உள்ளிட்டவற்றை நடத்திய சீமான் தற்போது மக்களின் மாநாட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை தமிழகம் CONGRESS கோவை INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக தேவர் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி சீமான் வன்னியர் தமிழ்நாடு கைது OPS AJITH கொரோனா நெல்லை சூர்யா TAMIL ACTRESS ஓபிஎஸ் THIRUMAVALAVAN SURIYA சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் RAJINIKANTH தீபாவளி அன்புமணி ELECTION COMMISSION கள்ளக்காதல் CSK பாலியல் தொல்லை அஜித் வடகிழக்கு பருவமழை மதுரை விடுமுறை கீர்த்தி சுரேஷ் தென்காசி திருப்பரங்குன்றம் தூத்துக்குடி