POLLING 📊 TN ELECTION 2026

 

நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

15 hours ago 04 ஏப்ரல் 2026 09:16 AM | views : 33

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாற்காலிக்கு அடியில் வந்து பதவி பெற்றவர் அல்ல என எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டு அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், "பல்லுக்கு அடங்காத வாயும், வாய்மைக்குக் கட்டுப்படாத சொல்லும் சபையில் என்றுமே நிலைத்ததில்லை.மறைந்த கலைஞர் கருணாநிதியின் அந்திமக் காலங்களில், அவரை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருந்தார்கள் என்பதை நாடறியும்.


ஐந்து முறை முதல்வராகப் பயணித்தவர், 50 ஆண்டுகால அரசியலில் தலைப்புச் செய்தியாக இருந்தவர், பல்வேறு முதல்வர்களுக்கு நினைவிடங்களைக் கட்டித் தந்தவர், தமிழ்நாட்டில் பாதிக்கும்மேல் நினைவிடங்களைக் கட்டித் தந்த கலைஞரின் நினைவிடத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.அந்த நினைவிடத்துக்காக மகன் என்ற முறையில், சட்டப் போராட்டம் நடத்தி, இடத்தை வாங்கித் தந்தவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.அம்மையாரின் மறைவின்போது வாய்ப்பிருந்தும்கூட, மக்களால் தேர்வுசெய்யப்பட்டுத்தான் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று கலைஞர் சொன்னார்.



அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் ஸ்டாலின்.நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்து, பதவியை கூவத்தூரில் ஏலத்தில் எடுக்கப்பட்ட தலைவர் அல்ல எங்கள் தலைவர்.வார்த்தைகள் அளவுமீறினால், நாங்களும் வார்த்தைகளால் அளவுமீறத் தயாராக இருக்கிறோம். எந்தப் பந்தைக் கொண்டு நீங்கள் எறிகிறீர்களோ, அதே பந்து உங்கள் பக்கமும் திரும்பும்.எங்கள் தலைவர் (மு.க. ஸ்டாலின்), அவரின் தலைவரை தலைவராகவும், அரசியல் குருவாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர்" என்று தெரிவித்தார்.



பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை பாஜக CHENNAI BJP அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் PMK பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் கைது அன்புமணி ராமதாஸ் கனமழை காங்கிரஸ் சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கோவை CONGRESS கொலை COIMBATORE திருமாவளவன் PARLIAMENT ELECTION தமிழ்நாடு சீமான் UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM தீபாவளி இந்திய அணி EDAPPADI PALANISWAMI AJITH தென்காசி அமமுக பிரதமர் மோடி KEERTHY SURESH TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM OPS நெல்லை ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN கொரோனா வடகிழக்கு பருவமழை NELLAI தேவர் நடிகை ஓபிஎஸ் அஜித் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி PRIME MINISTER MODI மதுரை வன்னியர் MADURAI CSK பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION SEEMAN விடுமுறை